POST 2
POST 2 ஆழ்மன சக்தி உங்களுக்குள் ஒளிந்திருக்கும் புதையல்...
அளவற்ற செல்வங்கள் உங்கள் கைக்கெட்டும் தூரத்தில் உள்ளன.அவற்றை அடைய நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்கள் மனக்கண்களைத் திறந்து உங்களுக்குள் ஒளிந்திருக்கும் மாபெரும் புதையர்களஞ்சியத்தை தரிசிப்பதுதான். நீங்கள் புகழோடும், மகிழ்ச்சியோடும், அமோகமாகவும் வாழ்வதர்க்குத்தேவையான அனைத்தையும் உங்களுக்குள் இருக்கும் சேமிப்புக் கிடங்கிலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.
எல்லையற்ற சக்தி நிறைந்த இப்புதயர்க்கலஞ்சியமும், அளவில்லா அன்பும் தங்களுக்குள் இருப்பதை அறிந்து கொள்ளாத மக்கள் பலரும், தங்கள் முழு ஆற்றலை உணர்ந்து கொள்ள முடியாதவர்களாக இருந்து விடுகின்றனர். உங்களுக்கு வேண்டிய அனைத்தும் இதிலிருந்து பெற முடியும்.
காந்த விசையுட்டபட்ட ஓர் இரும்பு துண்டால், தன எடையை போல 12 மடங்கு எடையுள்ள பொருட்களை தூக்க முடியும்.அதே இரும்பு துண்டிலிருந்து அக்காந்த விசை நீக்கபட்டால், ஒரு இறகைக்கூட அதனால் தூக்க முடியாது.
இது போன்று, மக்களிலும் இருவகையானோர் உள்ளனர்.கவர்ந்திழுக்கும் ஈர்ப்பு சக்தி நிரந்த மக்கள் துணிச்சலோடும் தன்னம்பிக்கையோடும் இருப்பார்கள். தாங்கள் வெற்றி நடை போட பிறந்தவர்கள் என்பது அவர்களுக்குத் தெரியும்.
அதே சமயம், வலுவிலந்தவர்கலாக ஏராளமான மக்கள் உள்ளனர்.அவர்கள் மனம் முழுவதும் பயன்களும் சந்தேகங்களும் நிறைந்திருக்கும்.அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும்போது " ஒருவளை நான் தோற்றுவிட்டால் என்னவாகும்? நான் என் பணத்தை இழக்க நேரிடலாம்.மக்கள் என்னை பார்த்து ஏளனமாக சிரிப்பார்கள்.."என்று கூறுவார்கள்...இத்தைகைய மக்கள் வாழ்வில் வெகுதூரம் சென்றடைய போவதில்லை.முன்னேற விடாமல் தடுக்கும் அவர்களது பயம் அவர்கள் இருக்கும் இடத்திலேயே அவர்களை முடக்கி போட்டு விடும்.காலத்தால் அழியாத இந்த பரம ரகசியத்தை நீங்கள் கண்டறிந்து அதை நடைமுறைப்படுத்தினால், உங்களுக்கு வேண்டியதை ஈர்த்துக்கொள்வதக்கான காந்த சக்தியை நீங்கள் பெறலாம்.
காலத்தால் அழியாத மாபெரும் இரகசியம். ஆரக்கிள் என்ற குறி சொல்லும் தேவ தேவதைகள் பண்டைய கிரேக்கர் காலத்தில் மிகவும் பிரபலம்.
கி.மு. ஆறாம் நூற்றாண்டில் க்ரோசியஸ் என்ற மன்னன் அரசியலில் ஒரு முக்கியமான முடிவு எடுக்க ஆரக்கிள்களிடம் குறி கேட்க எண்ணினான். அதற்கு முன் அந்த ஆரக்கிள்கள்களுக்கு உண்மையில் அந்த அற்புத சக்திகள் உள்ளனவா என்பதை ஊர்ஜிதப்படுத்திக் கொள்ள முடிவு செய்தான். உடனே அவன் ஏழு திசைகளில் ஏழு ஆரக்கிள்களிடம் தன் சேவகர்களை அனுப்பி "இன்றிலிருந்து சரியாக நூறு நாட்கள் கழித்து அவர்களிடம் கேளுங்கள் "இந்த நேரத்தில் எங்கள் அரசர் க்ரோசியஸ் என்ன செய்து கொண்டிருக்கிறார்?" என்று. அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை என்னிடம் உடனடியாக வந்து சொல்லுங்கள்" என்று கட்டளையிட்டான்.
அந்த நூறாவது நாள் வந்ததும் க்ரோசியஸ் எந்த யூகத்திலும் அந்த ஆரக்கிள்கள் தன் செயலைச் சொல்லி விடக்கூடாது என்று எண்ணி வழக்கமாகச் செய்யும் எல்லாக் காரியங்களையும் ஒதுக்கி வைத்து விட்டு வினோதமான ஒரு காரியம் செய்தான். ஒரு ஆமையையும் ஒரு ஆட்டையும் கொன்று இரண்டையும் ஒரு பெரிய வெண்கலப் பாத்திரத்தில் போட்டு வெண்கலத் தட்டால் மூடி வேக வைத்துக் கொண்டிருந்தானாம். டெல்•பை என்ற ஆரக்கிள் "எனக்கு ஆமை வாசனை தெரிகிறது....நெருப்பில் ஒரு ஆட்டுக்குட்டியின் சதையும் பொசுங்குகிறது தெரிகிறது. அது வெண்கலப்பாத்திரத்தில் போடப்பட்டிருக்கிறது. அதன் மூடியும் வெண்கலம்" என்று கூறினாராம்.
அரசர் அந்தப்புரத்தில் இருக்கிறார், மந்திரிகளுடன் ஆலோசனை நடந்து கொண்டிருக்கிறார் என்று யூகத்தில் சொல்வது சுலபம். அது பல நேரங்களில் பலிக்கவும் கூடும். ஆனால் க்ரோசியஸ் மன்னன் செய்து கொண்டு இருந்ததைச் சொல்ல வேண்டுமானால் உண்மையாகவே அந்த ஆரக்கிளிடம் அந்த சக்தி இருந்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.
அந்த நாள் முதல் இந்த நாள் வரை இது போன்ற கதைகள் ஏராளம். ஒரு உண்மை சம்பவம் இருந்தால் ஆயிரம் கற்பனைச் சம்பவங்கள் புனைக்கப்படுகின்றன. கேட்பவைகளில் இருந்தும் படிப்பவைகளில் இருந்தும் உண்மையான சம்பவத்தைக் கண்டுபிடிப்பது மிகவும் சிரமமே. (தொடரும் )
Comments
Post a Comment