Post 8
POST 8 நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் நீங்கள் கேட்கும் ஒவ்வொரு சொல்லும் உங்கள்
நீங்கள் படிக்கும் ஒவ்வொரு விஷயமும் உங்கள் ஆழ் மனதை பாதிக்கும்.
அது நேர்மறையாகவா அல்லது எதிர் மறையாகவா என்பது அந்த விஷயத்தை பொறுத்தது.
நீங்கள் தொடர்ந்து வெற்றி கதைகள் படித்து வந்தால் அந்த vibration வேலை செய்ய ஆரம்பித்து விடும்.
தொடர்ந்து தோல்வி விஷயங்களை கேள்விப்பட்டு வந்தால் அந்த நெகடிவ் vibration வேலை செய்ய ஆர்மபித்து விடும்.
உங்கள் வாழக்கையை நீங்கள் தான் தெரிந்தோ தெரியாமலோ தேர்வு செயகிறீர்கள். Consciously or unconsciously . இனிமேல் நாமே தேர்வு செயது ஆழ்மனதின் ப்ரோக்ராம் மாற்றலாம்.
நமது ஆழ்மனம் ஒரு எப் எம் ஸ்டேஷன் போன்றது. நமது மனதினில் உதிக்கும் ஒவ்வொரு எண்ணத்திற்கும் ஒரு frequency இருக்கிறது. அதே frequency உள்ள விஷயத்தை அல்லது நபரை அது ஈர்க்கிறது. சூழ்நிலைகளையும் உருவாக்குகிறது.
உதாரணமாக, நீங்கள் சாலையில் செல்லும் போது ஒரு நபர் தவறான பாதையில் வந்து உங்களிடம் மோத வரும் பொழுது நம்மையும் அறியாமல் அவரை திட்டி விடுகிறோம். அது இயல்பு. ஆனால் மனதினில் என்ன மாற்றம் நடைபெறுகிறது. அந்த frequency தொற்றி கொண்டு விடுகிறது. அந்த வினாடி முதல் அதே frequency சம்பவங்களையே அது ஈர்க்கிறது. இன்னும் சில நபர்கள் அதே போல வண்டி ஓட்டுவதை நீங்கள் சந்திக்கிறீர்கள்.
இதற்கு என்ன பண்ணலாம் ? அது போல சம்பவங்களில் சற்று பொறுமையை கையாண்டு அந்த நபரை திட்டாமல் விட்டு விடலாம். அது நமக்கு தான் நல்லது. தவறான நெகடிவ் vibration ஏறி விடாமல் காப்பாற்றலாம்.
நமது வாழக்கையில் நல்ல விஷயங்களை ஈர்க்க:
முதலில் தொலைக்காட்சியில் சீரியல்களை பார்ப்பதை தவிருங்கள். அது உங்கள் மனதினில் உடலில் நோய்களைத்தான் உருவாக்கும்
எல்லா சூழ்நிலைகளிலும் நல்லதே நாடாகும் என்று நினையுங்கள்.
நல்ல நேர்மறையான வார்த்தைகளையே அடிக்கடி உபயோகப்படுத்துங்கள்.
நெகடிவ் நபர்களிடமிருந்து விலகி இருங்கள்.
சுய முன்னேற்ற புத்தகங்களை தினம் முப்பது நிமிடங்கள் படியுங்கள்
இன்னும் வரும்
Comments
Post a Comment