POST 1

POST 1: ஆழ்மனம் மிக மிக சக்தி வாய்ந்தது. "நீ என்னவாக ஆக வேண்டும் என நினைக்கிறாயோ அதுவாக ஆக முடியும்" என்ற வாசகத்தை கேள்விப் பட்டிருப்பீர்கள். நமது முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள். "நீ மனது வைத்தால் உன்னால் முடியும்" என நமது ஆசிரியர்கள் சொல்லக் கேட்டிருக்கிறோம். மனம் என்பது ஒரு சாப்ட்வேர் போன்றது. அதில் வரும்கட்டளைகளுக்கு ஏற்ப நமது செயல்கள் இருக்கிறது. நமது விருப்பத்திற்கேற்ப இந்த சாப்ட்வேரை மாற்ற முடியும் என்பது மிகப் பெரிய ரகசியம். நமது மனதின் மாபெரும் சக்தியை பற்றி தெரிந்து கொள்ளாமலே வளர்ந்து விட்டோம். நமது மனதில் பதியப்பட்டுள்ள பதிவுகளுக்கும் நமது வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்களுக்கும் மிகுந்த சம்பந்தம் இருக்கிறது. நம் வாழ்க்கையில் பல கனவுகள் நமக்கு இருக்கின்றன. பணம், செல்வம், பதவி உயர்வு, கடன்களை அடைத்தேன், பிரச்சினைகளுக்கு தீர்வுகள், ஆரோக்கியம், முன்னேற்றம் என பல தேடல்கள் இருக்கின்றன. பல்வேறு முயற்சிகளை எடுக்கிறோம். ஆனால் நாம் எதிர்பார்த்த படி நடக்க வில்லை. நாம் எங்கே தவறு செய்கிறோம் ? நமது உழைப்பிற்கு ஏன் பலன் கிடைக்காமல் போகிறது என குழம்பி போய் நிற்கின்றோம். 'மனம் போல வாழ்வு' என சொல்வதை பார்க்கிறோம். மனம் சக்தி வாய்ந்தது என அனைவரும் கூறுகிறார்கள். அதை எப்படி சரியாக பயன் படுத்துவது என்ற யுக்திகள் பரம ரகசியமாகவே இதுவரை வைக்கப்பட்டுள்ளது. நாம் பார்ப்பது, கேட்பது, படிப்பது, எழுதுவது அனைத்துமே ஆழ்மனதிற்கு கட்டளைகளாக மாறுகின்றன நாமாக இதுவரை ஆழ்மனதிற்கு கட்டளை இட கற்று கொள்ளவே இல்லை. நமது மனதினில் உதயமாகும் ஒவ்வொரு சிந்தனைக்கும் ஒரு frequency உண்டு. மனம் FM ஸ்டேஷன் போல வேலை செய்கிறது. உங்களிடம் உள்ள சிந்தனை frequency வெளியே அனுப்புகிறது. அதே சிந்தனை உள்ள நபரை எப்படியோ இணைக்கிறது நம் தினசரி வாழ்வில் நடக்கும் விஷயங்கள் அனைத்திற்கும் நாம் தான் ஏதாவது ஒரு வழியில் காரணமாக இருக்கிறோம். அறியாமல் தெரியாமல் ஆழ்மனதிற்கு கட்டளைகளாக அனுப்பிக் கொண்டு இருக்கிறோம். (தொடரும்)

Comments

Popular posts from this blog

Post 9

POST 2

Post 12