Post 10
POST 10 : 20 நீங்கள் வெகு நாட்களாக பார்க்காத, சந்திக்காத நண்பர் ஒருவரை நினைவில் கொள்ளுங்கள். அவர் உருவத்தை கற்பனை செய்து பாருங்கள். அவரை எப்படியும் சந்திப்பேன் என் அடிக்கடி உங்களுக்குள் சொல்லி வாருங்கள். என்ன நடக்கிறது என்று பாருங்கள்.
எப்படியோ யாரவது ஒருவர் அந்த நண்பனை பற்றி பேச ஆரம்பிப்பார்கள். அவருடைய தொடர்பு கிடைப்பதற்கு எல்லா அறிகுறிகளும் தென்படும். ஏன், அந்த நண்பரே கூட தொலைபேசியில் அழைக்கலாம். திடீரென உங்களைக்கூட நேரில் சந்திக்கலாம்.
இது எப்படி சாத்தியம் ?
ஆழ்மனதினில் மீண்டும் மீண்டும் போடப்படும் விஷயம் ஒரு விதை ஆகிறது. அந்த எண்ணத்தின் அதிர்வலை அந்த நண்பரை உங்களிடத்தில் கொண்டு வந்து சேர்க்கும். இது ஒரே நாளில் நடப்பதற்கு சாத்தியக்கூறு குறைவு.
நான் வெற்றி கண்ட ஒரு கவுன்செலிங்
வெவ்வேறு ஜாதி பிரிவினர் இருவர் காதலித்து வந்தனர். பெண் உயர் ஜாதி. பெண் வீட்டில் பையன் நன்கு பரிச்சயம் ஆகிறான். பெண் வீட்டில் காதல் திருமணத்திற்கு தயார் ஆகி விடுகிறார்கள். பையன் வீட்டில் தந்தை ஏற்றுக்கொள்ளவே இல்லை. பையனுக்கு மூன்று மணமாகாத சகோதரிகள் இருக்கிறார்கள். பையனுக்கு திருமணம் முடிந்தால், அவன் சகோதரிகளுக்கு திருமணம் நடக்காமல் போய் விடுமே என்று தந்தை முட்டுக்கட்டை போடுகிறார்.
எப்படியோ கஷ்டப்பட்டு தந்தையின் சம்மதத்தை பெற்று நிச்சயதார்த்தம் ஏற்பாடு செய்யப்பட்டது. மண்டபம் எடுத்து உறவினர்கள் அழைக்கப்பட்டு தடபுடல் ஆக ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருக்கையில், நிச்சயதார்த்த தினத்திற்கு முந்தைய தினம் பையனின் தந்தை திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நிச்சயதார்த்தை நிறுத்திவிட்டார். பையனால் ஒன்றும் செய்ய இயலவில்லை.
பெண் வீட்டார் மிகந்த கோபத்தினிலும், அவமானத்திலும் திகைத்து போயினர்.
பெண் மிகவும் கோபப்பட்டு பையனை திட்டி தீர்த்து காதலை முறிக்கிறாள். பையன் போன் நம்பர் பிளாக் செய்து விட்டாள். போன் நம்பரையும் மாற்றி விட்டாள். பழைய வேலையை விட்டு தொடர்பு எல்லைக்கு அப்பால் போய் விட்டாள்.
பையன் மனசோர்விற்கு ஆளாகி அலுவலகம் செல்வதை விட்டு வீட்டினில் தனிமையாக மன நோயுடன் கிடக்கிறான்.
என்னிடம் பையனை கூடி வந்தார்கள். தீர விசாரித்தேன். பையன் இன்னும் பெண்ணின் மீது தீர காதலாக தான் இருக்கிறான். அந்த பெண்ணும் கண்டிப்பாக பையன மறக்க முடியாது ஒதுக்க முடியாது என்று தீர்க்கமாக கூறுகிறான். பெண்ணை எப்படி தொடர்பு கொள்வது.
நான் சில நுணுக்கங்களை சொல்லி கொடுத்து செய்ய சொன்னேன். இருபது நாளில் பெண்ணின் புதிய அலுவலகம் முகவரி, புதிய தொலைபேசி எண் பையனுக்கு கிடைத்து விட்டது. ஆனால் நான் ஒவ்வொரு நடவடிக்கையும் என்னை கேட்காமல் செய்யக்கூடாது என்று சொல்லி இருந்தேன். பொதுவான ஒரு இடத்திற்கு பெண்ணை வரச்சொல்லி அழைக்க சொன்னேன். ஒரு பத்து நிமிடம் மட்டும் தான். பத்து நிமிடம் கழித்து அந்த பெண் போய் விடலாம் என்று உறுதிமொழி கொடுக்க சொன்னேன். மூன்று நான்கு முறை கெஞ்சலுக்கு பின், அந்த பெண் ஒத்துக்கொண்டாள் (அதற்கும் நுணுக்கம் தான் வேலை செய்தது). அந்த சந்திப்பிற்கு நான் சென்று இருந்தேன். பல நுணுக்கங்களை கையாண்டு, அந்த பெண் இன்னும் இவனை விரும்புகிறாள் என்பதை சம்பாஷணை மூலம் அறிந்து கொண்டேன். நான் சொல்கிறபடி கேட்பதாக இருந்தால் இருவரையும் இணைத்து வைக்கிறேன் என்று வாக்குறுதி கொடுத்தேன். பையனின் தந்தையை திருமணத்திற்கு ஒத்து கொள்ள வைக்க ஒரு mind ப்ரோக்ராம். பெண்ணின் வீட்டில் மீண்டும் இதே பையனுக்கு திருமணத்திற்கு ஒத்து கொள்ள பெண்ண மூலம் ஒரு mind ப்ரோக்ராம். திருமணம் நல்லபடியாக நடந்துவிட ஒரு mind ப்ரோக்ராம் என்று ஒரு ஆறு மாதங்கள் போட்டதில், பெண்ணின் தந்தை பையனை சந்திப்பதற்கு ஒரு சந்தர்ப்பத்தை ஏற்பாடு செய்தேன். நானும் பெண் வீட்டிற்கு சென்று இருந்தேன். பையனின் தந்தை திருமணத்திற்கு ஏற்று கொண்டார்.அவரும் குடும்பத்துடன் அந்த சந்திப்பிற்கு வந்திருந்தார். பெண்ணின் தந்தை மட்டும் அதே கோபத்தில் திருமணத்திற்கு ஒத்து கொள்ளாத நிலையில் இருந்தார். ஒரு இருபது நிமிடம் அவரிடம் நான் பேசினேன். அந்த பேச்சில் பல மந்திற்கான கட்டளை வார்த்தைகளை உபயோகப்படுத்தினேன். ஒரு மணி நேர பேச்சிற்கு பின் ஓரளவிற்கு பெண் வீட்டார் இறங்கி வந்தார்கள்.
பையன் அடுத்த இரண்டு முறை பெண் வீட்டில் சந்தித்ததில் எல்லாம் நல்லபடியாக திட்டமிடப்பட்டு திருமணமும் சிறப்பாக நடந்தது. நான் இரு வீட்டில் இருந்தும் அழைக்கப்பட்டு இருந்தேன். நான் வெளிநாடு சென்று இருந்ததால் அந்த திருமணத்தில் கலந்து கொள்ள முடியவில்லை தம்பதியினர் பையன் வீடு குடும்பத்துடன் என் வீட்டிற்கு வந்து ஆசீர்வாதம் வாங்கி சென்றனர்.
மற்றவர்கள் மனதிற்கு கட்டளைகள் நாம் கொடுக்க முடியுமா ? முடியும். அவர்களுக்கு தெரியாமல் கொடுக்க முடியுமா ? முடியும்.
ஒரு நல்ல விஷயத்திற்காக பல நுணுக்கங்களை அதிஜாக்கிரதையாக கையாண்டு வெற்றிகரமாக இதை நடத்தி வைத்தேன். இன்று தம்பதியினர் எனக்கு நல்ல நண்பர்களாக இருக்கிறார்கள். ஆனால் ஒருவருக்கும் தெரியாது, பின்னால் இதனை நுணுக்கங்கள் பயன்படுத்தப்பட்டன என்று. அது அப்படியே இருக்கட்டும்.
குடும்பத்தில், குழந்தைகளுக்கு அவர்கள் அறியாமல் அவர்கள் மனதிற்கு கட்டளை கொடுக்கலாம். குடும்பத்தில் அமைதி நிலவ இது போல செய்யலாம்.
சில புகைப்படங்கள் சில பொம்மைகள், சில உருவ படங்கள் மனதினில் மாற்றத்தை கொண்டு வரும். (இன்னும் வரும்)
Comments
Post a Comment