Post 6

POST 6: மனம்🦚 எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதற்கு ஒரு சின்ன உதாரணம் 🌻ஒரு பெண், லண்டன் நகரத்தில் வாழ்பவர். அங்குள்ள கால நிலைக்கு ரோஜா மலர்கள் நன்கு வளரும். அவை எல்லோருக்கும் பிடிக்கும். 🌻ஆனால், இந்த பெண்ணிற்கு ரோஜா மலர்கள் என்றாலே அலர்ஜி. 🌻ஒரு பூ அருகிலிருந்தாலே, அவர் கண்களிலிருந்து கண்ணீர் வரும், தும்மல் வரும். ரொம்பவும் கஷ்டப்படுவார். அதனால் ரோஜா மலர்கள் அருகில் செல்லாமல் பார்த்துக் கொள்வார். 🌻இந்த சூழ்நிலையில் ஒருநாள், அவருடைய ஆபீசில் ஒரு மீட்டிங். கலந்து கொள்ளப் போனார். அந்த மீட்டிங் அறைக்குள் நுழைந்தவுடன் அவருக்கு ஒரே அதிர்ச்சி. 🌻ஒரு பெரிய டேபிளில் நூற்றுக்கணக்கான ரோஜா மலர்களை வைத்து அலங்கரித்திருந்தார்கள். 🌻'ஒரு பூ அருகில் இருந்தாலே நமக்கு அலர்ஜியாச்சே, இவ்வளவு பூக்கள் மத்தியில் நாம் எப்படி மீட்டிங்கை அட்டென்ட் செய்யப் போகிறோம்' என்று பயந்தார். 🌻ஆனால் வேறு வழியில்லாமல், அவருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் சென்று அமர்ந்தார். பூக்களைப் பார்த்ததுமே அவருக்கு கண்களில் இருந்து நீர் வந்தது, தும்மலும் வந்தது, முகமெல்லாம் சிவந்து விட்டது. 🌻மீட்டிங் இன்னும் ஆரம்பிக்கப் படவில்லை, இந்த சூழ்நிலையில், பின்னாலிருந்து ஒருவர் எழுந்து வெளியில் செல்கிறபோது "இந்த பூக்களைப் பாருங்கள். நிஜமான பூக்கள் போலவே இருக்கின்றன.." என்று வியந்தபடி கூறிக்கொண்டே சென்றார். 🌻அப்பொழுதுதான் இவருக்கு தெரிந்தது, அந்த பூக்கள் உண்மையான பூக்கள் அல்ல. எல்லாமே காகிதத்தால் செய்யப்பட்ட செயற்கை மலர்கள் என்று. 🌻இவர் யோசித்தார்.. "இந்த பூக்கள் எப்படி எனக்கு அலர்ஜியை ஏற்படுத்த முடியும்..?" 🌻இப்படி நினைத்த மறுவினாடியே அவருடைய அலர்ஜிக்குண்டான அறிகுறிகள் அனைத்துமே மறைந்து விட்டன. இதுதான் நமது மனம்.. இந்த மனதால் நோய்களை உருவாக்கவும் முடியும்.. குணப்படுத்தவும் முடியும்.. இந்த மனதால் பிரச்னையை உருவாக்கவும் முடியும்.. அதற்கு தீர்வையும் தர முடியும். நம் வாழ்க்கையில் வேணும் என்கிற விஷயங்களை நம் ஆழ்மனதின் மூலம் அதன் சக்தியின் மூலம் பெற முடியுமா என்றால் முடியும் என்று ஆணித்தரமாக கூறுவேன். என் வாழ்க்கையில் கிட்டத்தட்ட 20 , 25 விஷயங்கள் நான் ஆழ்மனதிற்கு கட்டளையாக கொடுத்து கிடைத்திருக்கிறது. நம்பித்தான் ஆகவேண்டும். அதன் அனுபவத்தை வைத்து தான் இதுவரை ஆழ்மன சக்தி பற்றி 56 ஒரு நாள் பயிற்சிகள் ஆறு நகரங்களிலும் மலேஷியாவிலும் நடத்தியிருக்கிறேன். நம்புங்கள், உங்களால் பிரமாண்டமான விஷயங்களை நடத்த முடியும். தெளிவான கனவுகளை கொண்டு அதை அடைய முடியும்

Comments

Popular posts from this blog

Post 9

POST 2

Post 12