Post 7
POST 7 ஆழ்மன சக்தியை உபயோகப்படுத்தி நம் வாழ்க்கையில் தேவையானவற்றை பெற்றுக் கொள்ள முடியுமா ?
எனக்கு கிடைத்து நேர்மறை அனுபவங்களே என்னை இந்த பயிற்சி கொடுக்கும் பயிற்சியாளராக மாற்றியது.
நுணுக்கங்களை தெரிந்து கொண்டு எனக்கு நானே பல சோதனைகளை செய்துள்ளேன்.
செல்வந்தர் ஆக வேண்டும் என்றால் ஒரு பணக்கட்டை எண்ணிக் கொண்டு இருப்பதாக கற்பனை செய்து கொண்டே இரு என்ற ஒரு நுணுக்கத்தை படித்து தொடர்ந்து இரண்டு மாதங்கள் பயிற்சி செய்தேன்.வங்கியில் வேலை செய்து கொண்டு இருந்த நேரம். என்னை வங்கி காசாளராக வேலை செய்யும் படி நிர்பந்திக்க பட்டேன். அதுநாள் வரை வங்கி காசாளர் வேலைக்கு ஆசைப்படாமல் தவிர்த்து வந்தேன். அதிகம் பேர் விடுமுறையில் சென்றதால் பதினைந்து நாட்கள் காசாளராக வேலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
ஆழ்மனதிடம் என்ன கேட்டோம், என்ன கொடுத்திருக்கிறது என்று ஆராய்ச்சி செய்தால். நான் கேட்டதை தான் கொடுத்திருக்கிறது. நான் மிக தெளிவாக கேட்க வில்லை. என்னுடைய பணத்தை நான் எண்ணுவதாக கற்பனை செய்யவில்லை. பொதுவாக செய்ததினால், மற்றவர்கள் பணத்தை என்னும் வேலைக்கு என்னை தள்ளிவிட்டது.
(என்னுடைய வீட்டில் அலமாரியில் இருந்து பணக்கட்டை எடுத்து எண்ணிக் கொள்வது போல கற்பனையை மாற்றி செய்தேன்).
பயிற்சிகள் மூலம் என்னுடைய மாத வருமானம் ஒரு லட்சத்தை தொட்டு விட வேண்டுமென்று நுணுக்கங்களை செய்தேன். மூன்று மாதங்கள் கழித்து என்னுடைய ஒரு மாத பயிற்சி வருமானம் ஒரு லட்சத்து ஐந்தாயிரமாக அதிகரித்தது. ஆகா ! நமது நுணுக்கம் சரியாக வேலை செய்கிறது என்று சந்தோஷப்பட்டேன். அடுத்தமாதத்தில் 80000 ஆக சரிந்தது. அதற்கு அடுத்த மாதம் 60000 மாதமாக சரிந்தது. எப்படி இப்படி ஆனது என்று ஆராய்ந்ததில் உண்மை புலப்பட்டது. மாத வருமானம் ஒரு லட்சத்தை தொட்டு விட வேண்டும் என்று தானே போட்டிருந்தேன். தொட்டு விட்டது. அவ்வளவு தான். (எனது வருமானம் அதிகரித்து கொண்டே செல்கிறது என்று பிறகு மாற்றி கொண்டேன்).
ஒன்று புரிந்து கொள்ளுங்கள். உங்கள் ஆழ் மனம் உங்களுக்கு உதவிட தயாராக இருக்கிறது. ஆனால் நுணுக்கங்களையும், கட்டளைகளையும் சரியாக போடவில்லை எனில் கேட்டது கிடைக்காமல் போகலாம். சில சமயம் எதிராக கூட மாறி விடலாம்.
இது வரை எனக்கு சுமார் இருபத்தி ஐந்து விஷயங்களுக்கு மேல் நானே எனக்கு கட்டளைகள் கொடுத்து எனக்கு கிடைத்திருக்கிறது. கிடைக்காமல் போனது பத்து பதினைந்து இருக்கலாம். எங்கோ ப்ரோக்ராமில் தவறு நடந்திருக்கிறது. ஆனால் நான் பயிற்சி கொடுத்து கற்று கொண்டவர்கள் சுமார் நூறு பேருக்கு மேல் அவர்களுக்கு வேண்டியது நடந்திருக்கிறது. திருமணம் தடைபட்டவர்களுக்கு திருமணம் நடந்திருக்கிறது. வியாபாரம் கூடியிருக்கிறது. வருமானம் கூடியிருக்கிறது. கடன்கள் அடைபட்டிருக்கிறது. நல்ல வேலைக்கு மாற்றம் கிடைத்திருக்கிறது. ஏன் நல்ல வேலைக்காரி கூட அமைந்திருக்கிறார்கள்.
இந்த ஆழ் மனதின் சக்தியை எப்படி சரியாக உபயோகப்படுத்துவது ?
இன்னும் ஆழமாக பிரவேசிப்போம். தொடரும்
Comments
Post a Comment