Posts

Showing posts from May, 2023

Post 14

POST 15: ஆழ்மனம் ஒரு அறிமுகம் ஆழ்மனம் மிக மிக சக்தி வாய்ந்தது அது நன்மை தரும் சக்தியாகவே இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. அது தீமையின் ஊற்றாகக் கூட இருக்கலாம். அது வரமாகலாம். சாபமுமாகலாம். அது எப்படி ? மேல்மனம் மூலமாகத் தான் ஆழ்மனம் தகவல்களைப் பெறுகிறது. அது மேல்மனம் எப்படிச் சொல்கிறதோ அப்படியே எடுத்துக் கொண்டு நினைவு வைத்துக் கொள்கிறது. நல்லது, கெட்டது, இனிமையானது, சகிக்க முடியாதது என்று எப்படியெல்லாம் மேல்மனம் அடைமொழிகளோடு செய்திகளை நினைக்கிறதோ அதே அடைமொழிகளோடு அந்த தகவல்களை சேமித்து வைத்துக் கொள்கிறது. ஆழ்மனம் மிக மிக சக்தி வாய்ந்ததாக இருப்பினும் அது தனியாக சிந்தித்தறியும் வேலையை செய்வதில்லை. ஆழ்மனம் தான் நம் பழக்க வழக்கங்கள் பதிந்திருக்கும் இடம். நம்மை உண்மையாக இயக்குவது அது தான். கவனத்தோடு சிந்தித்து செயல்படும் போது மட்டுமே நாம் மேல் மன ஆதிக்கத்தில் இருக்கிறோம். மற்ற சமயங்களில் நாம் ஆழ்மன தகவல்கள் படியே இயக்கப்படுகிறோம். உதாரணத்துக்கு ஒரு வாகனத்தை ஓட்டக் கற்றுக் கொள்ளும் போது மேல் மனம் கவனமாக இருந்து ஒவ்வொன்றையும் செய்கிற...

Post 13

Post: 13 நமக்குள்ளே ஒரு மருந்தகம் இருக்கிறது பிரபஞ்ச சக்தி - Cosmic Energy... உங்களால் நோய்களை பிடித்து கொள்ள முடியாது... நீங்கள் அப்படி நினைக்காதவரை.... அப்படி நினைத்தால், உங்கள் எண்ணங்களால் அவற்றை உள்ளே அனுப்புகிறீர்கள்...... நீங்கள் சிறிது நலமற்று இருந்தாலும் அதை பற்றி பேசாதீர்கள்.. அது உங்களுக்கு இன்னும் அதிகமாக வரவேண்டுமென்றால் மட்டுமே பேசுங்கள்.... பெரும்பாலான மக்கள் தங்களுக்கு தெரியாமலே மனதால் பல நோய்களை கவர்ந்து இழுத்து கொள்கிறார்கள்... முடி கொட்டுதல், அதிக எடை, தைராய்டு, மூட்டு வலி, கண்பார்வை பிரச்சனைகள், மாறுபட்ட ஹார்மோன் பிரச்சனைகள், மைகிரேன், காய்ச்சல், தலைவலி, கான்சர், மற்றும் பல நோய்களை மக்கள் தங்களுக்கு தெரியாமலே மனதால் கவர்ந்து இழுத்து கொள்கிறார்கள்.. நோய்கள் எல்லாமே உங்கள் எதிர்மறை சிந்தனையால் மட்டுமே உருவாகிறது.. நமக்கு ஏற்ற தாழ்வான கண்ணோட்டம் இருப்பதையும், நம் நன்றியுணர்வுடன் இல்லாததையும் உணர்த்தவே நமது உடல்கூறு நோய்களை உருவாக்குகிறது.. உங்களுக்கு நோய் விழிப்புணர்வு தர விருப்பம் இருந்தால் ஆரோக்கியம் பற்றி மட்டும் பேசுங்கள்... நீங்கள் சிறிது நலமற்று இருந...

Post 12

POST 12: 'ஒரு யோகியின் சுயசரிதை'யில் பரமஹம்ச யோகானந்தா தன் குரு யுக்தேஸ்வருடன் தனக்கேற்பட்ட அனுபவங்களை விவரித்திருக்கிறார். கல்லூரியில் படிக்கையில் ஒரு கோடை விடுமுறையில் பூரி ஆஸ்ரமத்தில் உள்ள தன் குருவை சந்திக்க யோகானந்தா செல்கையில் தங்கள் தோட்டத்தில் விளைந்த ஆறு காலி•பிளவர்களை எடுத்துச் சென்றார். அவற்றை யோகானந்தாவின் அறையிலேயே வைத்திருந்து மறுநாள் சமையலுக்குத் தர யுக்தேஸ்வர் சொல்ல அவற்றைத் தன் கட்டிலுக்கு அடியில் யோகானந்தா உள்ளே தள்ளி வைத்தார். மறுநாள் அதிகாலை யுக்தேஸ்வருடன் யோகானந்தரும் மற்ற சீடர்களும் வெளியே காற்று வாங்க நடந்தனர். சிறிது தூரம் சென்ற பின் திடீரென்று யுக்தேஸ்வர் யோகானந்தரிடம் கேட்டார். "நீ ஆஸ்ரமத்தின் பின் கதவை சரியாகப் பூட்டினாயா?" யோகானந்தர் யோசித்து விட்டு "பூட்டியதாகத் தான் நினைவு" என்றார். யுக்தேஸ்வர் சிரித்தபடி சொன்னார் "நீ சரியாகப் பூட்டவில்லை. அதன் தண்டனையாக நீ கொண்டு வந்திருந்த ஆறு காலி•ப்ளவர்களில் ஒன்றை இழக்கப் போகிறாய்". பிறகு அனைவரும் வந்த வழியே திரும்பிச் சென்றனர். ஆசிரமம் கண்ணுக்கெட்டும் தொல...

Post 11

POST : 11 தங்கள் விரும்பியவற்றை மக்கள் பெறாதிருப்பதற்கான ஒரே காரணம் அவர்கள் தங்களுக்கு எது வேண்டும் என்பதை விட, எது வேண்டாம் ஏந்திபாது குறித்து அதிகமாக சிந்தித்து கொண்டு இருக்கிறார்கள். நீங்கள் சித்தரிக்கும் எண்ணங்களை உற்று நோக்குங்கள், கவனியுங்கள். நீங்கள் சிந்தும் வார்த்தைகளை உன்னிப்பாக கேளுங்கள். கல்லூரி மாணவர்கள் அதிகமாக பேசும் வார்த்தை ' அரியர்ஸ் வந்துட கூடாது'. இதற்கு பதிலாக 'அனைத்து பாடங்களிலும் பாஸ் செய்ய வேண்டும்' என்று சொல்லலாமே. நமது வாழ்க்கையில் பல பிரபஞ்ச விதிகள் வேலை செயகின்றன. அதில் ஒன்று. ஈர்ப்பு விதி. நீங்கள் பேசும் வார்த்தைகள், படிக்கும் விஷயங்கள், கேட்கும் விஷயங்கள் என்பதை அடிப்படையாக கொண்டு உங்களுக்கு எல்லாவற்றையும் ஈர்க்கிறது. எதை படிக்கிறீர்கள், பார்க்கிறீர்கள், பேசுகிறீர்கள் அதை அப்படியே உங்களுக்கு வரவழைத்து கொடுக்கிறது.

Post 10

POST 10 : 20 நீங்கள் வெகு நாட்களாக பார்க்காத, சந்திக்காத நண்பர் ஒருவரை நினைவில் கொள்ளுங்கள். அவர் உருவத்தை கற்பனை செய்து பாருங்கள். அவரை எப்படியும் சந்திப்பேன் என் அடிக்கடி உங்களுக்குள் சொல்லி வாருங்கள். என்ன நடக்கிறது என்று பாருங்கள். எப்படியோ யாரவது ஒருவர் அந்த நண்பனை பற்றி பேச ஆரம்பிப்பார்கள். அவருடைய தொடர்பு கிடைப்பதற்கு எல்லா அறிகுறிகளும் தென்படும். ஏன், அந்த நண்பரே கூட தொலைபேசியில் அழைக்கலாம். திடீரென உங்களைக்கூட நேரில் சந்திக்கலாம். இது எப்படி சாத்தியம் ? ஆழ்மனதினில் மீண்டும் மீண்டும் போடப்படும் விஷயம் ஒரு விதை ஆகிறது. அந்த எண்ணத்தின் அதிர்வலை அந்த நண்பரை உங்களிடத்தில் கொண்டு வந்து சேர்க்கும். இது ஒரே நாளில் நடப்பதற்கு சாத்தியக்கூறு குறைவு. நான் வெற்றி கண்ட ஒரு கவுன்செலிங் வெவ்வேறு ஜாதி பிரிவினர் இருவர் காதலித்து வந்தனர். பெண் உயர் ஜாதி. பெண் வீட்டில் பையன் நன்கு பரிச்சயம் ஆகிறான். பெண் வீட்டில் காதல் திருமணத்திற்கு தயார் ஆகி விடுகிறார்கள். பையன் வீட்டில் தந்தை ஏற்றுக்கொள்ளவே இ...

Post 9

POST 9 : 1956ல் கனடாவில் டொரண்டோவைச் சேர்ந்த டாக்டர் ஹெரால்டு ரோசன் என்ற மனோதத்துவ மருத்துவர் தன்னிடம் சிகிச்சைக்கு வந்த ஒரு நபரை ஹிப்னாடிச உறக்கத்தில் ஆழ்த்த அந்த நபர் எழுந்து உட்கார்ந்து எதையோ எழுத ஆரம்பித்தார். அவர் ஒரு பாரா எழுதி விட்டு ஓய்ந்து பின் சுயநினைவுக்கு வந்தார். அதைப் படிக்க முயன்ற டாக்டருக்கு ஒன்றும் புரியவில்லை. அது என்ன மொழி என்றே தெரியவில்லை. அதை எழுதிய நோயாளிக்கும் அது பற்றி ஒன்றும் தெரியாமல் போகவே அந்த டாக்டர் அது எதாவது மொழியா இல்லை அர்த்தமில்லாத வரை எழுத்துகளா என்று கண்டு பிடிக்க மொழி ஆராய்ச்சியாளர்களிடம் அந்தத் தாளை அனுப்பினார். அவர்களிடமிருந்து கிடைத்த பதில் அந்த டாக்டரை இன்னும் அதிகமாகக் குழப்பியது. அந்த மொழி ஆராய்ச்சியாளர்கள் அது மேற்கு இத்தாலியில் கிமு ஒன்றாம் நூற்றாண்டு வரை பேசப்பட்ட ஆஸ்கன் என்ற மொழி என்றும் அதன் எழுத்து வடிவிற்கான ஒரு ஆதாரம் கிமு ஐந்தாம் நூற்றாண்டில் ஒரு பிணத்துடன் சேர்ந்து புதைக்கப்பட்ட ஈயத் தகடில் கிடைத்திருக்கிறது என்றும் கூறினார்கள். அது ஏதோ மந்திரிக்கப்பட்ட சாபம் என்று பின்னர் ஆராய்ச்சியில் தெரிந்ததாகவும் அந்த சாபத்தைத் தான் ஆஸ்கன் மொழ...

Post 8

POST 8 நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் நீங்கள் கேட்கும் ஒவ்வொரு சொல்லும் உங்கள் நீங்கள் படிக்கும் ஒவ்வொரு விஷயமும் உங்கள் ஆழ் மனதை பாதிக்கும். அது நேர்மறையாகவா அல்லது எதிர் மறையாகவா என்பது அந்த விஷயத்தை பொறுத்தது. நீங்கள் தொடர்ந்து வெற்றி கதைகள் படித்து வந்தால் அந்த vibration வேலை செய்ய ஆரம்பித்து விடும். தொடர்ந்து தோல்வி விஷயங்களை கேள்விப்பட்டு வந்தால் அந்த நெகடிவ் vibration வேலை செய்ய ஆர்மபித்து விடும். உங்கள் வாழக்கையை நீங்கள் தான் தெரிந்தோ தெரியாமலோ தேர்வு செயகிறீர்கள். Consciously or unconsciously . இனிமேல் நாமே தேர்வு செயது ஆழ்மனதின் ப்ரோக்ராம் மாற்றலாம். நமது ஆழ்மனம் ஒரு எப் எம் ஸ்டேஷன் போன்றது. நமது மனதினில் உதிக்கும் ஒவ்வொரு எண்ணத்திற்கும் ஒரு frequency இருக்கிறது. அதே frequency உள்ள விஷயத்தை அல்லது நபரை அது ஈர்க்கிறது. சூழ்நிலைகளையும் உருவாக்குகிறது. உதாரணமாக, நீங்கள் சாலையில் செல்லும் போது ஒரு நபர்...

Post 7

POST 7 ஆழ்மன சக்தியை உபயோகப்படுத்தி நம் வாழ்க்கையில் தேவையானவற்றை பெற்றுக் கொள்ள முடியுமா ? எனக்கு கிடைத்து நேர்மறை அனுபவங்களே என்னை இந்த பயிற்சி கொடுக்கும் பயிற்சியாளராக மாற்றியது. நுணுக்கங்களை தெரிந்து கொண்டு எனக்கு நானே பல சோதனைகளை செய்துள்ளேன். செல்வந்தர் ஆக வேண்டும் என்றால் ஒரு பணக்கட்டை எண்ணிக் கொண்டு இருப்பதாக கற்பனை செய்து கொண்டே இரு என்ற ஒரு நுணுக்கத்தை படித்து தொடர்ந்து இரண்டு மாதங்கள் பயிற்சி செய்தேன்.வங்கியில் வேலை செய்து கொண்டு இருந்த நேரம். என்னை வங்கி காசாளராக வேலை செய்யும் படி நிர்பந்திக்க பட்டேன். அதுநாள் வரை வங்கி காசாளர் வேலைக்கு ஆசைப்படாமல் தவிர்த்து வந்தேன். அதிகம் பேர் விடுமுறையில் சென்றதால் பதினைந்து நாட்கள் காசாளராக வேலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆழ்மனதிடம் என்ன கேட்டோம், என்ன கொடுத்திருக்கிறது என்று ஆராய்ச்சி செய்தால். நான் கேட்டதை தான் கொடுத்திருக்கிறது. நான் மிக தெளிவாக கேட்க வில்லை. என்னுடைய பணத்தை நான் எண்ணுவதாக கற்பனை செய்யவில்லை. பொதுவாக செய்ததினால், மற்றவர்கள் பணத்தை என்னும் வேலைக்கு என்னை தள்ளிவிட்டது. (என்னுடைய வீட்டில் அலமாரியில் இ...

Post 6

POST 6: மனம்🦚 எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதற்கு ஒரு சின்ன உதாரணம் 🌻ஒரு பெண், லண்டன் நகரத்தில் வாழ்பவர். அங்குள்ள கால நிலைக்கு ரோஜா மலர்கள் நன்கு வளரும். அவை எல்லோருக்கும் பிடிக்கும். 🌻ஆனால், இந்த பெண்ணிற்கு ரோஜா மலர்கள் என்றாலே அலர்ஜி. 🌻ஒரு பூ அருகிலிருந்தாலே, அவர் கண்களிலிருந்து கண்ணீர் வரும், தும்மல் வரும். ரொம்பவும் கஷ்டப்படுவார். அதனால் ரோஜா மலர்கள் அருகில் செல்லாமல் பார்த்துக் கொள்வார். 🌻இந்த சூழ்நிலையில் ஒருநாள், அவருடைய ஆபீசில் ஒரு மீட்டிங். கலந்து கொள்ளப் போனார். அந்த மீட்டிங் அறைக்குள் நுழைந்தவுடன் அவருக்கு ஒரே அதிர்ச்சி. 🌻ஒரு பெரிய டேபிளில் நூற்றுக்கணக்கான ரோஜா மலர்களை வைத்து அலங்கரித்திருந்தார்கள். 🌻'ஒரு பூ அருகில் இருந்தாலே நமக்கு அலர்ஜியாச்சே, இவ்வளவு பூக்கள் மத்தியில் நாம் எப்படி மீட்டிங்கை அட்டென்ட் செய்யப் போகிறோம்' என்று பயந்தார். 🌻ஆனால் வேறு வழியில்லாமல், அவருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் சென்று அமர்ந்தார். பூக்களைப் பார்த்ததுமே அவருக்கு கண்களில் இருந்து நீர் வந்தது, தும்மலும் வந்தது, முகமெல்லாம் சிவந்து விட்டது. 🌻மீட்டிங் இன்னும் ஆரம்பிக்கப...

Post 5

POST 5: "என் மகளை நீங்கள் தான் குணப்படுத்திக் காப்பாற்ற வேண்டும்" என்று உள்ளூர் செல்வந்தர் ஒருவர் எட்கார் கேஸ் என்பவரிடம் போய் வேண்டிக் கொண்டார். அவரது ஐந்து வயது மகள் தன் இரண்டு வயதில் •ப்ளூவால் தாக்கப்பட்ட பிறகு படுத்த படுக்கையாகவே இருந்தாள். தினமும் வலிப்புகள் பல முறை வந்து தாக்க மகள் துடித்த துடிப்பை அவராலும், அவர் மனைவியாலும் சகிக்க முடியவில்லை. மூளை, மன வளர்ச்சிகளும் அந்த சிறுமிக்கு பாதிக்கப் பட்டிருந்தன. செல்வந்தரான அவர் பல மருத்துவர்களைக் கொண்டு சிகிச்சை அளித்துப் பார்த்தும் எந்தச் சிகிச்சையும் பலனளிக்கவில்லை. அப்போது தான் அவர் உறங்கும் ஞானி என்று பலராலும் அழைக்கப்பட்ட எட்கார் கேஸைப் பற்றிக் கேள்விப்பட்டார். எட்கார் கேஸ் ஆறாம் வகுப்பு வரை தான் படித்தவர். மருத்துவத்தைப் பற்றி எதுவும் அறியாதவர். சிறு வயதில் நோய்வாய்ப் பட்டு கோமா நிலைக்குப் போன அவர் தனக்கு எந்த மருந்து எப்படித் தர வேண்டும் என்று கோம...

POST 4

Post: 4 "அறிவியலில் எல்லா வினாக்களுக்கும் விடையில்லை" என்றார் உலகின் தலைசிறந்த விஞ்ஞானியான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். முன்பு குறிப்பிட்ட டெல்•பை ஆரக்கிள், •ப்ளோரிடாவின் குறி சொல்லும் பெண்மணி ஆகியோர் எப்படி தாங்கள் நேரில் கண்டிராத அந்த நிகழ்ச்சிகளை சொன்னார்கள் என்பதை நம்மால் அறிவியல் ரீதியாகப் புரிந்து கொள்ளுதல் சாத்தியமில்லை. ஆனால் எல்லா நாட்டுப் புராணங்களிலும், மதநூல்களிலும் இது போன்ற அற்புதச் செயல்கள் ஏராளம் உள்ளன. இதற்கும் ஒருபடி மேலாக எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை அசரீரியோ, தேவதூதர்களோ சொல்லும் நிகழ்வுகள் எல்லா மதநூல்களிலும் உள்ளன. "தேவகியின் எட்டாவது மகனாக கிருஷ்ணன் ஜனிப்பான். அவன் உன்னைக் கொல்வான்" என்று கம்சனுக்கு அசரீரி சொன்ன கதையை நாம் அறிவோம். கம்சன் அதைத் தடுக்க எல்லா வழிகளைப்...

POST 3

POST 3 : 1994ஆம் ஆண்டு அமெரிக்காவில் •ப்ளோரிடாவில் உள்ள ஒரு சிறு நகரத்தில் நடந்த இன்னொரு சம்பவத்தைப் பார்ப்போம். அந்த நகரில் ஒரு மத்திய வயது நபர் ஒரு நாள் வீட்டை விட்டு தன்னுடைய டிரக்கில் கிளம்பிப் போனவர் பின் திரும்பி வரவேயில்லை. உடனடியாகப் போலீசில் தெரிவிக்கப்பட்டது. யாரும் கொன்றிருக்கவோ கடத்தியிருக்கவோ வாய்ப்பில்லை என்பதை போலீசார் ஆரம்பத்திலேயே முடிவுக்கு வந்தனர். ஆனால் பிறகு அவரைக் கண்டு பிடிக்க முயன்ற போலீஸாரின் முயற்சி வெற்றி பெறவில்லை. தீயணைப்புப் படையினர் உதவியும் பெற்று பல இடங்களில் சுமார் 16 மாதங்கள் முயன்று தோற்ற போலீசாருக்கு ஒரு அபூர்வ சக்தி படைத்த பெண்மணியின் உதவியைப் பெற ஆலோசனை வழங்கப்பட்டது. காணாமல் போன மனிதர்கள், பொருட்கள் பற்றி அந்தப் பெண்மணி துப்பு தருவதில் வல்லவர் என்று சொல்லப்பட்டது. நம்பிக்கை சுத்தமாக இல்லாவிட்டாலும் முயற்சி செய்வதில் நஷ்டமில்லை என்று அதைக் கண்டுபிடிக்கும் பொறுப்பில் உள்ள ஒரு போலீஸ் அதிகாரி அந்தப் பெண்மணியை அணுகினார். அந்தப் பெண்மணி தன்னிடம் ஒரு மாதத்திற்கு அப்பாயின்மென்ட் இல்லையெனவும் ஒரு மாதம் கழித்து காணாமல் போன நபரின் ஏதாவது சில உடைமைகளை எடுத...

POST 2

POST 2 ஆழ்மன சக்தி உங்களுக்குள் ஒளிந்திருக்கும் புதையல்... அளவற்ற செல்வங்கள் உங்கள் கைக்கெட்டும் தூரத்தில் உள்ளன.அவற்றை அடைய நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்கள் மனக்கண்களைத் திறந்து உங்களுக்குள் ஒளிந்திருக்கும் மாபெரும் புதையர்களஞ்சியத்தை தரிசிப்பதுதான். நீங்கள் புகழோடும், மகிழ்ச்சியோடும், அமோகமாகவும் வாழ்வதர்க்குத்தேவையான அனைத்தையும் உங்களுக்குள் இருக்கும் சேமிப்புக் கிடங்கிலிருந்து பெற்றுக் கொள்ளலாம். எல்லையற்ற சக்தி நிறைந்த இப்புதயர்க்கலஞ்சியமும், அளவில்லா அன்பும் தங்களுக்குள் இருப்பதை அறிந்து கொள்ளாத மக்கள் பலரும், தங்கள் முழு ஆற்றலை உணர்ந்து கொள்ள முடியாதவர்களாக இருந்து விடுகின்றனர். உங்களுக்கு வேண்டிய அனைத்தும் இதிலிருந்து பெற முடியும். காந்த விசையுட்டபட்ட ஓர் இரும்பு துண்டால், தன எடையை போல 12 மடங்கு எடையுள்ள பொருட்களை தூக்க முடியும்.அதே இரும்பு துண்டிலிருந்து அக்காந்த விசை நீக்கபட்டால், ஒரு இறகைக்கூட அதனால் தூக்க ம...

POST 1

POST 1: ஆழ்மனம் மிக மிக சக்தி வாய்ந்தது. "நீ என்னவாக ஆக வேண்டும் என நினைக்கிறாயோ அதுவாக ஆக முடியும்" என்ற வாசகத்தை கேள்விப் பட்டிருப்பீர்கள். நமது முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள். "நீ மனது வைத்தால் உன்னால் முடியும்" என நமது ஆசிரியர்கள் சொல்லக் கேட்டிருக்கிறோம். மனம் என்பது ஒரு சாப்ட்வேர் போன்றது. அதில் வரும்கட்டளைகளுக்கு ஏற்ப நமது செயல்கள் இருக்கிறது. நமது விருப்பத்திற்கேற்ப இந்த சாப்ட்வேரை மாற்ற முடியும் என்பது மிகப் பெரிய ரகசியம். நமது மனதின் மாபெரும் சக்தியை பற்றி தெரிந்து கொள்ளாமலே வளர்ந்து விட்டோம். நமது மனதில் பதியப்பட்டுள்ள பதிவுகளுக்கும் நமது வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்களுக்கும் மிகுந்த சம்பந்தம் இருக்கிறது. நம் வாழ்க்கையில் பல கனவுகள் நமக்கு இருக்கின்றன. பணம், செல்வம், பதவி உயர்வு, கடன்களை அடைத்தேன், பிரச்சினைகளுக்கு தீர்வுகள், ஆரோக்கியம், முன்னேற்றம் என பல தேடல்கள் இருக்கின்றன. பல்வேறு முயற்சிகளை எடுக்கிறோம். ஆனால் நாம் எதிர்பார்த்த படி நடக்க வில்லை. நாம் எங்கே தவறு செய்கிறோம் ? நமது உழைப்பிற்கு ஏன் பலன் கிடைக்காமல் போகிறது என குழம்பி போய் நிற்கின...